ஆசியாவில் சமாதானத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளை வலுப்படுத்தும் திட்டம் - இலங்கையர்களுக்கும் வாய்ப்பு!

ஆசியாவில்  சமாதானத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளை வலுப்படுத்தும் திட்டம் - இலங்கையர்களுக்கும் வாய்ப்பு!

சல்ஸ்பேக் குளோபல் (Salzburg Global) தனது ஆசிய சமாதான ஊக்குவிப்பாளர் மன்றத்தின் ஆறு திட்டங்களை  வெளியிட்டுள்ளது.  இத்திட்டங்கள் யாவும் பிராந்தியத்தில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளன. 

இதற்காக, ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 சமாதான செயற்பாட்டாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதில் இலங்கையைச் சேர்ந்த சுமார் 08 பேர் அடங்குகின்றனர். 

இவர்களுக்கான ஆரம்பகட்ட பயிற்சி கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பில் வழங்கப்பட்டது.  அப்போது நிச்சயதார்த்தங்கள் யாவும்  பிராந்திய அங்கத்தவர்கள் முன்னிலையில் அளிக்கை செய்யப்பட்டனர். 

அதனைத் தொடர்ந்து இத்திட்டங்கள் பல்வேறு குழுக்களால் ஒழுங்குபடுத்தப்பட்டன. கொழும்பில் இடம்பெற்ற பயிற்சிகளின் போது வழங்கப்பட்ட பின்னூட்டல்களை அடிப்படையாகக் கொண்டு,  வெவ்வேறு குழுக்கள்,  இத்திட்டங்களை செப்பனிட்டன. 

கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி இந்த ஆறு திட்டங்களும் அமுல்படுத்தலுக்காக வெளியிடப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் சமாதான செயித்திட்டங்களை ஊக்குவிப்பதற்காக சல்ஸ்பேக் குளோபல்  நிறுவனம் ஆசிய சமாதான ஊக்குவிப்பாளர் மன்றம் ஒன்றை நிறுவியிருந்தது.  

இம்மன்றத்தின்  அங்கத்தவர்களே,  மேற்படி ஆறு திட்டங்களையும் முன்னெடுக்க உள்ளனர். இத்திட்டங்களை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆறு குழுக்கள் அமல்படுத்த உள்ளன.  இலங்கை சேர்ந்தவர்கள் எட்டுப்பேரும், சுமார் மூன்று குழுக்களில் இடம்பெறுகின்றனர்.  

தமது செயத் திட்டங்களை தனித்தனியாக அமல்படுத்துவதற்காக ஒவ்வொரு குழுக்களும் தமது நாட்டிலும்  வெளிநாடுகளிலும் உள்ள உதவி வழங்கும் நிறுவனங்களை அணுக உள்ளன.  

ஆசிய சமாதான ஊக்குவிப்பாளர் மன்றம் பிராந்தியத்தில்  அமைதியை கட்டி எழுப்புவதற்கான  கூட்டமைப்பாக உள்ளது.  இது, சட்டம், கல்வித்துறை, சிவில் சமூகம் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் போன்றவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கி இருக்கிறது.  

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சல்ஸ்பேக் குளோபல் (Salzburg Global)  நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இயக்குனர் கலாநிதி சார்லஸ் எர்லிச் “ தெரிவு செய்யப்பட்டுள்ள ஆறு திட்டங்களும் ஆசிரிய பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகள் எதிர்கொள்ளும் முரண்பாடுகளை மையமாகக் கொண்டவை.  

அந்த நாடுகளில் உள்ள மக்களை பிரதானமாகக் கொண்டு அமல்படுத்தப்பட உள்ளன.  இத்திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் பிராந்தியத்தின் சமாதானத்தை  வலுப்படுத்துவதே எமது நோக்கம்” எனக் குறிப்பிட்டார்.

இத்திட்டங்களில் ஒன்று,  இந்தோனேஷியாவின் பழங்குடி பெண்களின் உரிமைகளை பாதுகாக்க முற்படுகுன்றது. இலங்கையைச் சேர்ந்த சிலர்,  சமாதான செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களின்  செயற்பாடுகளோடு தொடர்பான கதைகளை ஆவனப்படுத்த மற்றும் ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளனர். 

இத்திட்டம் “நாம் வெறும் எண்கள் அல்ல”  எனும் தலைப்பில் அமுல்படுத்தப்பட உள்ளது.  இதில், இந்தியா, கென்யா, மியான்மர், பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா, தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில்  சமாதானத்தை ஊக்குவிக்கும் பெண்ணிய சிந்தனையின் அடிப்படையில் செயல்படும் செயற்பாட்டாளர்கள் முனைப்பு காட்டி உள்ளனர். 

மற்றுமொரு திட்டம் சமாதானத்திற்கான புத்தகங்களை மக்கள் மையப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து, மியான்மரின் இளைஞர்கள் முறையான அடக்குமுறை, துன்புறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து எதிர்கொள்கின்றனர்.  

இது தொடர்பான திட்டம், சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, சட்ட உதவிகளை வழங்க உள்ளது.  பழங்குடி மக்களின் விவசாய நடைமுறைகளைப் பாதுகாத்து ஊக்குவிக்கவும் ஒரு திட்டம் முனைப்புக் காட்டுகுன்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த, பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஜெரோம் பாக்டோல் "பல நூற்றாண்டுகளாக, பழங்குடி விவசாயிகள் தலைமுறை தலைமுறையாக நிலத்தை வளப்படுத்தி வந்தனர். இன்று, அவர்களது நடைமுறைகள் அழிந்துவிலும் அபாயத்தில் உள்ளன" எனக் குறிப்பிட்டார்.

இத்திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள விரும்புவோர் அல்லது,  எதிர்காலத்தில் இவற்றோடு தொடர்புகளை பேணிக் கொள்ள விரும்புவோர் salzburgglobal.org ஐப் பார்வையிடவும்.